×

உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வாடகை பாக்கியை வசூலிக்க இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஒன்றிய அரசு கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வந்தபிறகு, கடந்த 2014ம் ஆண்டு நாடு முழுவதும் கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2017ம் ஆண்டு முதல் டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், 2017ம் ஆண்டுக்கு முன் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை எனக் கூறி, அதை வசூலிக்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்தும், வசூல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரியும் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பிலும், சில உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், எந்த நோட்டீசும், ஆதாரங்களும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் இருந்து பாக்கி தொகையை வசூலிக்க தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

The post உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வாடகை பாக்கியை வசூலிக்க இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Union Government ,
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...